தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தல் -மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்!

306

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசிடம், தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், டெங்குவை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்புடன் போர்க்கால அடிப்படையில் முதலமைச்சர் நடவடிக்கைகள் எடுத்து வருவதாக கூறினார். டெங்கு உயிரிழப்பை அரசு மறைக்கவில்லை என்று அவர், எதிர்கட்சியினரின் புகாருக்கு பதிலளித்தார். கொசுவை ஒழிப்பதில் மக்களின் ஒத்துழைப்போடு, மக்கள் இயக்கமாக அரசு செயல்பட்டு வருவதாக ஜெயக்குமார் விளக்கம் அளித்தார். மீனவர் பிரச்சனைகள் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசிடம், தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்றார்.