தமிழகத்தில் 6 மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார்-சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்!

177

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 6 மாதத்தில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் வந்துள்ள மத்திய இணை அமைச்சர் அஸ்வினிகுமார் சவுபே, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுவார் என்றும் அவர் கூறினார்.