இலங்கைச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 77 தமிழக மீனவர்கள் இன்று தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

431

இலங்கைச் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 77 தமிழக மீனவர்கள் இன்று தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்து செல்லும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட, 92 தமிழக மீனவர்கள இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு கொடுத்த அழுத்தம் காரணமாகவும், நன்னடத்தை காரணமாகவும், மீனவர்கள் 77 பேரை முதற்கட்டமாக விடுதலை செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி யாழ்ப்பாணம் சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 66 பேரையும், வவுனியா சிறையில் உள்ள 11 பேரையும் இலங்கை சிறைச்சாலை விடுதலை செய்துள்ளது. இதனையடுத்து, சர்வதேச கடல் எல்லைக்கு அழைத்துவரப்பட்டு, இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படும் 77 மீனவர்களும் இன்று தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.