தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகள் 4,500 ஆண்டுகள் பழமையானது என ஆய்வில் கண்டுபிடிப்பு ..!

703

தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகள் 4 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையானது என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திராவிட மொழிக் குடும்பம் குறித்து ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளான்க் கல்வி நிறுவனமும், டேராடூன் இந்திய வன உயிர் கல்வி நிறுவனமும் இணைந்து ஆராய்ச்சி நடத்தின. இது குறித்து அவர்கள் வெளியிட்ட ஆய்வறிக்கையில், திராவிட மொழிகள் இந்தியாவில் 22 கோடி மக்களால் பேசப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
திராவிட மொழி குடும்பத்தில் மிகப்பெரிய மொழிகளாக தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகியவை உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சமஸ்கிருதம் தெரிந்தவர்களின் எண்ணிக்கை தற்போது விரல் விட்டு எண்ணும் அளவிற்கே உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் அதன் பழமையை இப்போதும் தக்கவைத்து கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள், திராவிட மொழிகள் 4 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழைமையானது என்பதற்கான தொல்லியல் ஆதாரங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.