தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்- வானிலை மையம் !

358

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த 24 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழையோ அல்லது லேசான மழையோ பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையை பொறுத்தவரை வானம், மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை நேரங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.