45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பு திண்டாட்டம் அதிகரித்துள்ளது – தம்பிதுரை

132

45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பு திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களவையில் இடைக்கால பட்ஜெட் தொடர்பாக பேசிய அவர்,தேர்தலை மனதில் வைத்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதாக கூறினார். ஜி.எஸ்.டி மற்றும் ரூபாய் நோட்டு நடவடிக்கையால் சிறு, குறு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மத்திய அரசு கொண்டு வந்த திட்டங்களால் நாடு வளர்ச்சி பாதைக்கு செல்வதில் மாற்றமில்லை என்று கூறிய தம்பிதுரை ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் வேலைவாய்ப்பை பெருக்குவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பு திண்டாட்டம் அதிகரித்துள்ளதாகவும் கூறினார். தற்போது அறிவித்த சலுகைகளை ஏன் 2018 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய தம்பிதுரை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் என்பது போதாது என்றும், குறைந்தது 12 ஆயிரமாவது வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். தமிழக அரசுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்பான நிலுவை தொகைகளை உடனடியாக தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.