மகாராஷ்ட்ரா மாநிலம் முழுவதும் தாக்கரே திரைப்படம் வெளியீடு

77

மும்பை உள்பட மகராஷ்ட்ரா மாநிலம் முழுவதும் ‘தாக்கரே’ திரைப்படம் நேற்று வெளியானது. அப்போது திரையரங்குகள் முன்பு திரண்ட சிவசேனா தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.

மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரேயின் வாழ்க்கை சினிமாவாக தயாரானது. இந்த திரைப்படத்தை சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. தயாரித்து உள்ளார். அபிஜித் பன்சே இயக்கத்தில் நவாசுதீன் சித்திக் பால்தாக்கரே வேடத்தில் நடித்துள்ளார். மராத்தி மற்றும் இந்தியில் உருவான இந்த படம் மும்பை உள்பட மாநிலம் முழுவதும் நேற்று வெளியானது.
இதையடுத்து திரை அரங்குகளின் முன்பாக சிவசேனா நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிகளவில் திரண்டனர் அவர்கள் மேளதாளங்கள் இசைத்தும், பட்டாசுகள் வெடித்தும் சிவசேனா தொண்டர்கள் உற்சாகமாக கொண்டா டினர்.