தமிழகத்தில் சட்டம், ஒழுங்குப் பாதுகாக்கப்பட்டு….

346

தமிழகத்தில் சட்டம், ஒழுங்குப் பாதுகாக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில், நேற்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுகுறித்து, இன்று சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் காவல்நிலையங்கள் மீதே பெட்ரோல், குண்டு வீசப்பட்டது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார். காவல்நிலையத்திலுள்ள சி.சி.டி.வி. காமிராக்கள் சரியாகப் பராமரிக்கப்படுவதில்லை என்றும் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.
இதற்குப் பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேனாம்பேட்டைக் காவல்நிலையத்தில் 10 சி.சி.டி.வி. காமிராக்கள் உள்ளதாகத் தெரிவித்தார். இதுகுறித்து சந்தேகத்தின் அடிப்படையில் 12 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.