முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் : இறுதி ஆட்டத்தில் இந்தியா-வங்கதேசம் இன்று பலப்பரீட்சை ..!

272

இலங்கையில் இன்று நடைபெறும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய-வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
கொழும்பு நகரில் இலங்கை, இந்தியா, வங்கதேசம் அணிகள் பங்குபெறும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் தொடர் தோல்விகளை சந்தித்த இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில் இன்று இரவு 7 மணிக்கு துவங்கும் இறுதிப் போட்டியில் இந்திய, வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது வெற்றி பயணத்தை தொடரும் ஆர்வத்தில் உள்ளது. அதேசமயம் இலங்கையை வீழ்த்திய உத்வேகத்துடன் இந்தியாவை எதிர்க்கொள்ளும் வங்கதேச அணி வெற்றிபெற தீவிரம் காட்டும். இந்திய அணிக்கு பக்கபலமாக ஷிகர் தவாண், மனிஷ் பாண்டே, தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் உள்ளனர். இதனால் இன்றைய ஆட்டம் அனல்பறக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.