2018ஆம் ஆண்டு முதல் சம்பளம் வழங்கவில்லை ஊழியர்கள் மருத்துவமனை முன்பு போராட்டம்

131

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பல சங்கங்களின் சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

திருச்சி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கரூர் – கோவை சாலையில் பல்லாண்டு காலமாக தள்ளுவண்டி மற்றும் தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தியும், உரிய அனுமதி வழங்கக் கோரியும் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு வியாபாரிகள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் தற்காலிகமாக கடை மூடப்பட்டது.இதனிடையே, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி – ஆரணி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.