சிரியாவில் ரஷ்ய படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 19 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்!

1645

சிரியாவில் ரஷ்ய படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 19 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர்.
சிரியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெறும் உள்நாட்டு போரில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஐ.நா.சபை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இத்லிப் பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித்தாக்குதலில் குழந்தைகள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் குறித்த அதிகாரபூர்வ தகவலை இங்கிலாந்தை சேர்ந்த போர் கண்காணிப்பகம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதலை ரஷ்ய படைகள் நடத்தியிருக்கலாம் என்றும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.