சிரியா, ஈரான் ராணுவ தளவாடங்கள் மீது இஸ்ரேல் விமானங்கள் ஆவேச தாக்குதல் நடத்தின..!

1239

சிரியா, ஈரான் ராணுவ தளவாடங்கள் மீது இஸ்ரேல் விமானங்கள் ஆவேச தாக்குதல் நடத்தின.
சிரியாவில் சில ஆண்டுகளாக அதிபர் ஆசாத்துக்கு எதிராக வன்முறையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ஈரான் செயல்படுவதற்கு இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், தங்கள் எல்லையில் பறந்த ஈரானின் ஆளில்லா விமானத்தை இஸ்ரேல் படையினர் சுட்டு வீழ்த்தினர். சிரியாவின் ராணுவ தளவாடங்கள் மீதும் வான்வழி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் விமானங்களில் ஒன்றை சிரிய படையினர் சுட்டு வீழ்த்தினர்.