சிரியா போரில் உலகை கலங்க வைத்த சிறுவன் !

387

சிரியா போரில் உலக மக்களை கலங்க வைத்த சிறுவன் ஒம்ரான் தற்போது தன் பெற்றோருடன் மகிழ்ச்சியாக இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு சிரியா போரின் போது குவாட்ரிஜ் என்ற இடத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கட்டடம் ஒன்று இடிந்து தரைமட்டமானது. இந்த இடிபாடுகளில் ஓம்ரான் தக்னீஷ் என்ற சிறுவனை ராணுவத்தினர் மீட்டனர். உடல் முழுவதும் தூசியுடன் தலையில் ரத்த காயத்துடன் அந்த சிறுவன் மீட்கப்படும் வீடியோ அப்பொழுது வைரலாக பரவி உலக மக்களை கலங்க வைத்தது. இதை பார்த்த ஏராளமானோர் இந்த சிறுவனுக்காக பிராத்தனை செய்தனர். இந்நிலையில் தற்போது ஓம்ரான் நல்ல ஆரோக்கியத்துடன் தன் பெற்றோரோடு இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதை பார்த்த மக்கள் ஓம்ரானுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.