சிரியாவின் இடிலிப் நகரில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புத் தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்..!

3251

சிரியாவின் இடிலிப் நகரில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புத் தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போராளிகள் அதிகம் இருக்கும் நகரமான குவெட்டாவில் அரசு விமானப்படை மற்றும் ரஷ்ய விமானப்படையினர் இணைந்து நடத்திய தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமான குழந்தைகள் உள்பட ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டனர். இதனிடையே இடிலிப் நகரில் நேற்று நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 110 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே தங்களது பிடியில் இருந்த சிரிய மக்களை கிளர்ச்சியாளர்கள் விடுவித்துள்ளனர். விடுவிக்கப்பட்ட அனைவரும் பேருந்து மூலம் டூமா நகருக்கு வந்தடைந்ததாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.