சிரியாவில் காவல் நிலையத்திற்குள் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் உயிரிழப்பு..!

291

சிரியாவில் காவல் நிலையத்திற்குள் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள காவல் நிலையத்திற்குள் நுழைந்த தீவிரவாதிகள் தங்களது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் மற்றும் போலீசார் உள்ளிட்ட 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பலியானவர்களின் உடல்கள் அடையாளம் கண்டறியப்பட்டு வருவதாகவும், தீவிரவாதிகள் குறித்த விபரங்களை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.