போர் ஒப்பந்தத்தை மீறி சிரியாவில் நடைபெற்ற தாக்குதலில் அப்பாவி மக்கள் 100 பேர் உயிரிழந்தனர்.

223

போர் ஒப்பந்தத்தை மீறி சிரியாவில் நடைபெற்ற தாக்குதலில் அப்பாவி மக்கள் 100 பேர் உயிரிழந்தனர்.
சிரியாவில் அதிபர் அல் ஆசாத்துக்கு எதிராக ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் ஐந்து லட்சத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். போரை முடிவுக்கு கொண்டு வரும் நிலையில், அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, பத்து நாட்கள் போர்நிறுத்தத்துக்கு கிளர்ச்சியாளர்களும், அரசுப்படைகளும் ஒப்புதல் அளித்தன. இந்நிலையில், போர் நிறுத்தத்தை மீறி இட்லிப் நகரில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதேபோன்று, திக்ரித் நகரில் அப்பாவி மக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 40 பேர் பலியாகினர்.