சிறைகளில் தனிப்படைகள் கொண்டு திடீர் சோதனைகள் நடத்தப்படும் : சிறைத்துறை ஏடிஜீபி சைலேந்திர பாபு

359

சிறைகளில் தனிப்படைகள் கொண்டு திடீர் சோதனைகள் நடத்தப்படும் என்று, சிறைத்துறை ஏடிஜீபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஏடிஜிபி சைலேந்திர பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிறையில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் படித்து வருவதாக குறிப்பிட்டார். சுயதொழில்கள் கற்றுக் கொடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். சிறையில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் புழங்குகிறதா? என தனிப்படைகள் கொண்டு சோதனை நடைபெறும் என்றும் சைலேந்திரபாபு தெரிவித்தார்.