சுவாதியின் மரணம் ரயில்வே போலீசாருக்கும், சென்னை மாநகர போலீசாருக்கும் ஒரு வெட்கக்கேடான சம்பவம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

357

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட மென்பொருள் என்ஜினியர் சுவாதியின் இல்லத்திற்கு சென்று எதிர்க்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக குற்றம் சாட்டினார். சுவாதியின் மரணத்தை ஒட்டி அவரது தந்தை சொன்ன வார்த்தைகள் தம்மை மிகவும் நெகிழச் செய்ததாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.