இந்தியாவின் மிகவும் வயதான ஸ்வாதி என்ற பெண் புலி மரணம் !

192

இந்தியாவின் மிகவும் வயதான புலி என்று கருதப்படும் ஸ்வாதி என்ற பெண் புலி வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தது. அதன் வயது 20.
அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தியில் உள்ள உயிரியல் பூங்காவில் பெங்கால் வகையை சேர்ந்த ஸ்வாதி என்ற பெண் புலி பாதுகாக்கப்பட்டு வந்தது. 1997 ஆம் ஆண்டு மைசூரில் பிறந்த ஸ்வாதி இதுவரை 11 குட்டிகள் ஈன்றுள்ளது.
2005 ஆம் ஆண்டு அஸாம் மாநில உயிரியல் பூங்காவுக்குள் காலடி எடுத்து வைத்த ஸ்வாதி வயது முதிர்ந்த போதும் உற்சாகத்துடன் சுற்றித் திரிந்து வந்தது. 20 ஆண்டுகளுக்கு மேல் புலிகள் வாழ்வது குறைவு என்ற நிலையில் சுவாதி 20 வயதை கடந்ததை பெரிய விழாவாக கொண்டாட உயிரியல் பூங்கா நிர்வாகம் முடிவு செய்திருந்தது. இந்த நிலையில், ஸ்வாதி வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தது. இதனால் உயிரியல் பூங்கா பணியாளர்கள் வேதனையடைந்துள்ளனர்.