சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாருக்கு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது.

263

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாருக்கு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த பொறியாளர் சுவாதி கடந்த மாதம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சுவாதி கொலை தொடர்பாக ஏற்கனவே ராம்குமாரை மூன்று காவலில் எடுத்து காவல்துறையினர் விசாரித்தனர். இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி மேலும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதியளித்தது. இந்நிலையில், சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமாருக்கு இன்று ரத்த பரிசோதனை நடத்தப்பட்டது. ,இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் புழல் சிறைக்கு ராம்குமார் கொண்டு செல்லப்பட்டாஇந்த ரத்த பரிசோதனை ஆய்வறிக்கை கொலை வழக்கில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.