சுவாதி கொலை வழக்கில் அவரது நண்பர் முகமது பிலாலிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர்.

436

சுவாதி கொலை வழக்கில் அவரது நண்பர் முகமது பிலாலிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர்.

சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, கடந்த ஜூன் 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக, நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்பேரில், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ராம்குமாரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த போலீஸார், அவரின் ரத்த மாதிரியை எடுத்து சோதனை செய்துள்ளனர். மேலும், இக்கொலை வழக்கு தொடர்பாக சுவாதியின் நண்பர் முகமது பிலாலிடம் போலீசார் பலமுறை விசாரணை நடத்தினர். இந்த வழக்கில், குற்றப்பத்திரி்க்கையை போலீஸார் தயாரித்து வரும் நிலையில், நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில், முகமது பிலாலிடம் போலீஸ் உயரதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினர். 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த விசாரணையில், சுவாதி கொலை குறித்து பல்வேறு கேள்விகளை பிலாலிடம் போலீசார் கேட்டுள்ளனர்.