சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் புழல் சிறையில் உள்ள ராம்குமாரை அவரது பெற்றோர் முதல் முறையாக இன்று சந்தித்து பேசினர்.

237

சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் புழல் சிறையில் உள்ள ராம்குமாரை அவரது பெற்றோர் முதல் முறையாக இன்று சந்தித்து பேசினர்.
சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் மென் பொறியாளர் சுவாதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக நெல்லையை சேர்ந்த ராம்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ராம்குமாரின் தந்தை பரமசிவம், தாய் புஷ்பா ஆகியோர் முதல் முறையாக இன்று ராம்குமாரை சந்தித்து பேசினர். காவல்துறையினர் சிறப்பு அனுமதியை பெற்று வந்த இருவரும், புழல் சிறையின் தனி அறையில் ராம்குமாரை சந்தித்து பேசினர்.