சுவாமி மலை சிலைகளுக்கு புவி சார் குறியீடு..!

149

சுவாமி மலையில் சோழர் கால பாணியில் செய்யப்படும் உலோக சிலைகளுக்கு புவி சார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

கும்பகோணத்தை அடுத்துள்ள சுவாமி மலையில் சோழர் கால பாணியில் பஞ்சலோக சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. செம்பு, பித்தளை, ஈயம், வெள்ளி, தங்கம் ஆகிய ஐந்து உலோகங்களை கொண்டு தயாரிக்கப்படும் சிலைகள் பஞ்சலோக சிலைகள் என்று அழைக்கப்படுகின்றன. கலைநயத்துடன் பல்வேறு சிறப்புகள் கொண்டு விளங்கும் சுவாமிமலை பஞ்சலோகச் சிலைகளுக்கு புவிசார் குறியீடு எனப்படும் தனி முத்திரை அடையாளம் கிடைத்துள்ளது. இதன்மூலம் பிற பகுதிகளில் செய்யப்படும் சிலைகளை சுவாமிமலையில் செய்த சிலைகள் என்று கூறி ஏமாற்ற முடியாது என்பதால் ஸ்தபதிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.