100 சதவீத வாக்குப்பதிவு வந்தாலே மக்கள் விரும்பும் ஒரு ஜனநாயக ஆட்சி அமையும்..!

221

தென் சென்னை தொகுதிக்குட்பட்ட பட்டினப்பாக்கம் செய்ண்ட் ஜான்ஸ் பள்ளி வாக்குச்சாவடியில் நடிகர் எஸ்.வி சேகர் தனது வாக்கினை பதிவு செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்களிப்பது அனைவரது ஜனநாயக கடமையாகும் எனவும் 100 சதவீத வாக்குப்பதிவு வந்தாலே மக்கள் விரும்பும் ஒரு ஜனநாயக ஆட்சி அமையும் என குறிப்பிட்டார்.