சசிகலா, தினகரனை ஒதுக்கி விட்டு அதிமுகவால் அரசியல் செய்ய முடியாது : நடிகர் எஸ்.வி. சேகர்

574

சசிகலா, தினகரனை ஒதுக்கி விட்டு அதிமுகவால் அரசியல் செய்ய முடியாது என்று, பாஜக பிரமுகர் நடிகர் எஸ்.வி. சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டதாக கூறினார். வெற்றி பெற்ற அனைவரும் இரட்டை இலை சின்னத்தை முன்னிறுத்தி வாகை சூடியதாக தெரிவித்த எஸ்.வி. சேகர், சசிகலா தினகரனை ஒதுக்கி விட்டு அரசியல் செய்ய முடியாது என்று குறிப்பிட்டார்.