முதலமைச்சரின் சீரிய முயற்சியில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் வளர்ச்சி. சட்டசபையில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா பெருமிதம்.

220

மகளிர் முன்னேற்றத்தை முக்கிய குறிக்கோளாக கொண்டு முதலமைச்சர் ஜெயலலிதா செயல்பட்டு வருவதாக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா விளக்கம் அளித்துள்ளார்.
சட்டசபையில் இன்று சமூக நலம், சத்துணவு திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அவை உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர் சரோஜா, பதில் அளித்து வருகிறார்.
அப்போது பேசிய அவர், மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா என்று கூறினார். உள்ளாட்சி தேர்தலில் மகளிருக்கு 50 சதவீதம் இடஒதுக்கீட்டை முதன்முறையாக அறிவித்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா என்று அமைச்சர் சரோஜா பெருமிதமாக தெரிவித்தார். 12 மாநகராட்சிகளில் 7 பெண்கள் மேயர்களாக இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்
முதலமைச்சரின் சீரிய முயற்சியால், கடந்த 5 ஆண்டுகளில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் வளர்ச்சியடைந்துள்ளதாக அமைச்சர் சரோஜா் கூறினார்.
மகளிர் சுயஉதவிக்குழுக்களின் வளர்ச்சிக்காக, மகளிர் மேம்பாட்டிற்காக 26 ஆயிரத்து 460 கோடி ரூபாய் கடன் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக கூறினார். தமிழகத்தில் 6 லட்சத்து 16 ஆயிரம் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு, அதில் 92 லட்சத்து 84 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சரோஜா தெரிவித்தார்.