சுத்தமான பத்து ரயில் நிலையங்கள் பட்டியல். ஐந்தாவது இடத்தை பிடித்து சேலம் ரயில் நிலையம் சாதனை.

331

நாட்டின் சுத்தமான பத்து ரெயில் நிலையங்களில் தமிழகத்தில் உள்ள இரண்டு ரெயில் நிலையங்கள் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது.
நாட்டின் சுத்தமான மற்றும் அசுத்தமான ரெயில் நிலையங்கள் குறித்து அண்மையில் ஆய்வு நடத்தப்பட்டது. ஒரு லட்சத்து 30 ஆயிரம் பயணிகளிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 407 ரயில் நிலையங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில், முதல் பத்து இடங்களில் தமிழகத்தில் உள்ள கும்பகோணம் மற்றும் சேலம் ரயில் நிலையங்கள் முறையே ஐந்து மற்றும் ஒன்பதாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளன. இதில், குஜராத்தில் உள்ள காந்திதாம், ஜாம்நகர், சூரத், ராஜ்கோட் மற்றும் அங்கலேஷ்வர் ஆகிய ஐந்து ரயில் நிலையங்கள் இடம் பிடித்துள்ளன. மிகவும் அசுத்தமான ரெயில் நிலையங்களில் பீகார் மாநிலத்தில் உள்ள மதுபானி முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.