ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களுக்கு 8 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

440

ஊதிய உயர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களுக்கு 8 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு மற்றும் நிலுவைத் தொகையினை வழங்க வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் ஜனவரி 4-ம் தேதியில் இருந்து 11-ம் தேதிவரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என போக்குவரத்து துறை அமைச்சர் உறுதி அளித்திருந்தார்.
ஊழியர்களுக்கு போராட்டக் காலத்திற்கான ஊதியத்தை பிடித்தம் செய்யக் கூடாது என்று நீதிமன்றமும் அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு லட்சத்து பத்தாயிரம் ஊழியர்களுக்கு 8 நாட்களுக்கான ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
அரசின் இந்த நடவடிக்கையால் போக்குவரத்து ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.