சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் உதவி மைய அலுவலகம் திறக்கப்படாததால் பொருட்கள் திருடப்படுவதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்

220

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் உதவி மைய அலுவலகம் திறக்கப்படாததால் பொருட்கள் திருடப்படுவதாக பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் கோவிலில் சாமி தரிசனம் நடைபெறும் காலை, மாலை நேரங்களை தவிர மற்ற நேரங்களில் கோவில் நடை அடைக்கப்பட்டு விடும். இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களை பாதுகாக்கும் வகையில் காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுவரை காவல் உதவி மையம் செயல்படவில்லையென்றும் அதனால் விலையுயர்ந்த பொருட்கள் திருடப்படுவதாகவும் பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்