ஈரானில் சிக்கித்தவித்த தமிழக மீனவர்கள் 21 பேர் மீட்பு – சுஷ்மா சுவராஜ்

204

ஈரானில் சிக்கித்தவித்த தமிழகத்தை சேர்ந்த 21 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்..

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஈரானில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு தமிழகத்தை சேர்ந்த 21 மீனவர்கள் பணிக்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு முறையாக ஊதியம், உணவு, தங்க இடம் வழங்காமல் ஈரான் தொழிலதிபர் கொடுமை படுத்தியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து தமிழகத்தை சேர்ந்த 21 பேரையும் மீட்டுத்தருமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை வலியுறுத்தினார்.இந்தநிலையில் ஈரானில் சிக்கித்தவித்த தமிழக மீனவர்கள் 21 பேரும் இந்திய தூதரகத்தின் முயற்சியால் மீட்கப்பட்டுவிட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர்கள் அனைவரும் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் சென்னை அழைத்துவரப்படுவார்கள் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.