அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ள சுஷ்மா சுவராஜ்..!

897

அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ள சுஷ்மா சுவராஜ், அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

ரஷ்யாவில் இந்திய- ரஷ்ய , தொழில்நுட்ப, பொருளதார ஒத்துழைப்பு கமிஷன் அமைப்பின் 23-வது மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ரஷ்யா சென்றுள்ளார். மாஸ்கோ விமான நிலையம் சென்ற அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவை சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசினார். அப்போது இரு நாட்டு உறவுகள் குறித்து இருவரும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதினை சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.