திரிபோலியில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும்..!

198

லிபியத் தலைநகர் திரிபோலியில் தொடர்ந்து வன்முறை நீடிப்பதால் அங்கிருக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

லிபியாவில் ஐ.நா. ஆதரவுடன் பிரதமராக உள்ள பயேஸ்அல் சராஜ் பதவியில் இருந்து விலக வேண்டும் எனக் கோரி ராணுவத் தளபதி கலீபா ஹப்தார் தலைமையில் கடந்த இரண்டு வாரங்களாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தலைநகர் திரிபோலியில் நடைபெற்ற மோதல் மற்றும் வன்முறைகளில் இருநூற்றுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் திரிபோலியில் உள்ள இந்தியர்கள் ஐந்நூறு பேரும், உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கேட்டுக்கொண்டுள்ளார்.

உடனடியாக வெளியேறாவிட்டால் பின்னர் அவர்களை அங்கிருந்து மீட்க இயலாது என்றும் சுஷ்மா டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இந்தியர்கள் எவரும் லிபியாவுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும் சுஷ்மா அறிவுறுத்தியுள்ளார்.