ஜப்பான் சென்றுள்ள இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அந்நாட்டு பிரதமர் ஷின்ஷோ அபேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்..!

1889

ஜப்பான் சென்றுள்ள இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அந்நாட்டு பிரதமர் ஷின்ஷோ அபேவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.இந்தியா – ஜப்பான் இடையிலான ஒன்பதாவது சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்க வருமாறு இந்திய வெளியுறவுத்துறை சுஷ்மா சுவராஜுக்கு ஜப்பான் அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்று மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக சுஷ்மா சுவராஜ் கடந்த 28 ஆம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டு டோக்கியோ சென்றார். அன்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் சுஷ்மா மற்றும் ஜப்பான் வெளியுறவு துறை அமைச்சர் டாரோ கோனோ கலந்துகொண்டனர். இந்த நிலையில், கடைசி நாளான இன்று, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, சர்வதேச விவகாரம், இரு நாட்டு நல்லுறவு, வர்த்தக உறவு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.