தமிழகத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் – சுரேஷ் பிரபு

196

தமிழகத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என்று மத்திய தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்க இருப்பதாகவும், அதன் மூலமாக தமிழகம் மட்டும் இன்றி தேசம் முழுவதும் வேலைவாய்ப்பு உருவாகும் என்றார். அப்போது தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் விவாதிப்போம் என கூறிய மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, இந்தியாவில் உள்ள முதன்மை மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் தமிழகத்திற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யும் என்று தெரிவித்தார்.இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியை இன்று அவர் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளார்.