விளையாடிக்கொண்டிருந்த மாணவர்கள் மீது இரும்பு கேட் விழுந்ததால் பரபரப்பு..!

280

சூரத் பள்ளிகூடம் ஒன்றில், விளையாடிக்கொண்டிருந்த மாணவர்கள் மீது இரும்பு கேட் விழுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில், மாணவர்கள் இரண்டு பேர் கேட் அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பள்ளி கேட் மாணவர்கள் மீது விழுந்தது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஒடிவந்து, கேட்டை நகர்த்தி விட்டு மாணவர்களை மீட்டனர். இதில் ஒரு மாணவனுக்கு தலையிலும், மற்றொரு மாணவனுக்கு காலிலும் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.