திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சியில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்து பக்தர்களுக்கு அருள் புரிந்தார்

245

திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சியில் முருகப்பெருமான் சூரனை வதம் செய்து பக்தர்களுக்கு அருள் புரிந்தார்
அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது. பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடைச் சூழ, சப்பரத்தில் அழைத்து வரப்பட்ட முருகப்பெருமான், தன் கையில் உள்ள வேல் மூலம் கஜமுகா சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி முதலில் நடைபெற்றது. இதனையடுத்து சிங்கமுகா சூரனை வதம் செய்த முருகப்பெருமான், மூன்றாவதாக சூரன் பானுகோபனை வதம் செய்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
சூரனை வதம் செய்த ஜெயந்தி நாதரை காண, தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.