காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகா அரசு தாக்கல் செய்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகின்றன.

222

காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழகம் மற்றும் கர்நாடகா அரசு தாக்கல் செய்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகின்றன.
காவிரியில் தமிழகத்திற்கு வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி வீதம் 7 நாட்களுக்கு திறந்துவிட உச்சநீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டது. இதை செயல்படுத்த மறுத்த கர்நாடக அரசு, சட்டசபையை கூட்டி குடிநீருக்கு மட்டுமே அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. மேலும், தண்ணீர் திறந்து விடும் தீர்ப்பை தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக்கோரி உச்ச நிதிமன்றத்தில் கர்நாடக அரசு மனு தாக்கல் செய்யப்படுள்ளது. தீர்ப்பை மதிக்காமல் இருக்கும் கர்நாடகாவின் மனுவை உச்சநீதிமன்றம் விசாரிக்க கூடாது என்று தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், காவிரி மேற்பார்வை குழு உத்தரவு தொடர்பாக இரு மாநில அரசுகளும் ஏற்கனவே மனு தாக்கல் செய்துள்ளன. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யூ.யூ. லலித் முன்னிலையில் இந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெறுகிறது.