அரசு விடுதியில் முன்னாள் முதலமைச்சர்கள் தங்கும் உரிமையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

351

அரசு விடுதியில் முன்னாள் முதலமைச்சர்கள் தங்கும் உரிமையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில், 6 முன்னாள் முதலமைச்சர்கள், அரசு பங்களாக்களில் தங்கி இருப்பதாகவும், பல முறை நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் வெளியேறவில்லை எனவும் லோக்பிரஹாரி என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 6 முன்னாள் முதலமைச்சர்களும் 2 மாதங்களுக்குள் அரசு பங்களாக்களை காலி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த முன்னாள் முதலமைச்சர்கள் பட்டியலில் ராஜ்நாத் சிங், என்.டி.திவாரி, மாயாவதி, எம்.எஸ்.யாதவ், ராம் நரேஷ் யாதவ் மற்றும் கல்யாண் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.