ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

265

பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில், 18 ஆண்டுகளாக நடந்த சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு கபொதுச் செயலாளர் சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கும் 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதை எதிர்த்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் அப்பீல் செய்தனர்.இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்ற தனி நீதிபதி குமாரசாமி, அவர்கள் நான்கு பேரையும் விடுதலை செய்தார். ஆனால் 4 பேரின் விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணை பல மாதங்களுக்கு முன்பே முடிந்து விட்டது. இதனால் இந்த வழக்கின் தீர்ப்பு எப்போது கூறப்படும் என்பது புதிராகவே இருந்து வந்தது. இந்நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு கூறப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.