குற்றப் பின்னணி உடைய எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளின் நிலவரம் என்ன?-உச்ச நீதிமன்றம்

331

குற்றப் பின்னணி கொண்ட எம்.பி க்கள் மற்றும் எம்.எல்.ஏ க்களின் விவரங்களை தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
குற்றப் பின்னணி கொண்ட எம்.பி க்கள் மற்றும் எம்.எல்.ஏ க்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என சமூக நல ஆர்வலர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள், மற்றும் வழக்கை எதிர்கொண்டு இருப்பவர்கள் குறித்து கூடுதல் விவரம் தேவைப்படுவதாக தெரிவித்தது. எனவே இது தொடர்பான தகவல்களை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.