உச்சநீதிமன்ற தீர்ப்புகள் முதல் முறையாக தமிழில் மொழி பெயர்ப்பு

157

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் முதல் முறையாக தமிழில் மொழிபெயர்த்து வெளியிடபட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தெலுங்கு, அசாமி, கன்னடம், மராத்தி உள்ளிட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உச்ச நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், முதல் முறையாக உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, உச்சநீதிமன்றம் வெளியிட்ட 100 தீர்ப்புகளில் 2 தீர்ப்புகள் தமிழில் வெளியாகி உள்ளன. குறிப்பாக, ஓட்டல் சரவணபவன் அதிபர் ராஜகோபால் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.