வரதட்சணை புகார் அளித்தால் உடனடியாக கைது செய்யலாம் – உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

364

வரதட்சணை புகார் அளித்தால் உடனடியாக கைது செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

வரதட்சணை தொடர்பான வழக்கை, உச்சநீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. இந்த அமர்வு வரதட்சணை கொடுமை தொடர்பாக யாரையும் உடனடியாக கைது செய்ய வேண்டிய அவசியமில்லை என ஏற்கனவே தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்தநிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வரதட்சணை புகாரில் உடனடியாக கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், புகார் தொடர்பாக உடனடியாக கைது செய்யலாம் என்றும் தெரிவித்தனர். புகார் அளிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்திய நீதிபதிகள், முன்ஜாமின் வழங்குவது குறித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள் முடிவு செய்யலாம் எனவும் கூறியுள்ளது.