அரசு வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது குறித்து பதில் அளிக்காத மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

159

அரசு வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் அரசு சாரா அமைப்பு சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் நீதிமன்ற உத்தரவின்படி பதில் மனு தாக்கல் செய்யாத மாநில அரசுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். அரசு வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்துவது தொடர்பாக தமிழகம், அசாம், நாகாலாந்து, ஆந்திரா, டெல்லி, பீஹார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டினர். அடுத்த வழக்கு விசாரணையின்போது மாநில அரசுகள் பதில் மனுக்களை கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்த அவர்கள், டெல்லி மற்றும் பீஹார் மாநில அரசு போக்குவரத்து துறை செயலர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.