இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

82

ஓ.பி.எஸ், இ.பி.எஸ்க்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது . இதை எதிர்த்து டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி தினகரன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், ஓ.பி.எஸ் அணிக்கே இரட்டை இலை சொந்தம் என தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து தினகரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பி.எஸ், இ.பி.எஸ்க்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு தடை விதிக்க முடியாது என்று கூறினர். மேலும் குக்கர் சின்னத்தை டிடிவி தினகரனுக்கு ஒதுக்குவது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். மேலும் இரட்டை இலை வழக்கு தொடர்பாக ஓ.பி.எஸ்,இ.பி.எஸ் மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், அடுத்த விசாரணையை 25ம் தேதிக்கு ஒத்திவைத்தது.