காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக அமையும் என்று முதலமைச்சர் பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்..!

442

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக அமையும் என்று முதலமைச்சர் பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சேலம், மதுரை, கோவையில் பஸ் போர்ட் அமைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணைய மத்திய அரசிதழில் வெளியிடச் செய்ததை போற்றும் வகையில், மேட்டூரில் ஒரு கோடி மதிப்பில் நினைவுத்தூண் நிறுவப்பட்டுள்ளது. இதை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார். புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றிய அவர், குடி மராமத்து மூலம் மேட்டூர் அணையில் கூடுதலாக தண்ணீரை சேமிக்க வழிவகை செய்யப்பட்டு இருப்பதாக கூறினார். முன்னதாக, சேலத்தில் 22 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ள மேம்பால பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய அவர், விமான நிலையம் போன்று கோவை, மதுரை, சேலத்தில் பஸ் போர்ட் அமைக்கப்படும் என தெரிவித்தார்.