மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் விவசாயிகளிடம் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை திருப்பி கொடுக்க டாடா நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை விவசாயிகள், உள்ளுர் மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

308

மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் விவசாயிகளிடம் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை திருப்பி கொடுக்க டாடா நிறுவனத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை விவசாயிகள், உள்ளுர் மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.
கடந்த 2006ஆம் ஆண்டில், மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் நானோ கார் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க டாடா நிறுவனம் விவசாயிகளிடம் இருந்து ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது. இதனையடுத்து, கார் தயாரிக்கும் தொழிற்சாலை குஜராத்திற்கு மாற்றப்பட்டநிலையில், கையகப்படுத்திய நிலத்தை திரும்ப வழங்க டாடா நிறுவனம் மறுத்துள்ளது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பில், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 12 வாரங்களுக்குள் விவசாயிகளிடம் திரும்ப வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. டாடா நிறுவனம் நிலம் கையகப்படுத்திய உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இது விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, உச்சநீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக குழு அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். சிங்கூர் மக்களுக்கு இதுபோல தீர்ப்பு வரவேண்டும் என்பது தன் கனவு என்று கூறிய அவர், இனி அமைதியாக உயிர்துறப்பேன் என்றும் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
இதனிடையே. உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று, சிங்கூர் பகுதி மக்களும், விவசாயிகளும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.