கருணை அடிப்படையில் கூடுதல் மதிப்பெண் வழங்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை..!

403

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் கூடுதல் மதிப்பெண் வழங்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தமிழ் தாளில் வினாக்கள் தவறாக இருந்ததாக புகார் எழுந்தது. இதனால் தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சி.பி.எஸ்.இ. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.

கருணை மதிப்பெண் வழங்குவதால் மற்ற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கருணை மனு வழங்கக் கோரும் டி.கே. ரெங்கராஜனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழகத்தில் இரண்டாம் கட்ட மருத்துவ கலந்தாய்வை நடத்தவும் ஆணையிட்டனர்.