சட்டப்பேரவையில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டதை எதிர்த்து திமுக உறுப்பினர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

257

சட்டப்பேரவையில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டதை எதிர்த்து திமுக உறுப்பினர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், பேரவை கூட்டத்துக்கு வராத, கையெழுத்திடாத உறுப்பினர்கள் அனைவரையும் சபாநாயகர் சஸ்பெண்ட் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. திமுக உறுப்பினர்களை ஒரு வாரகாலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்யவேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை அவசர வழக்காக உடனே விசாரிக்கவேண்டும் என்றும் தலைமை நீதிபதியிடம் அவர் வலியுறுத்தினார். ஆனால்,அவரது கோரிக்கையை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், முறைப்படி மனுவை தாக்கல் செய்தால் வரும் திங்கட்கிழமை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கூறினார்.