சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா ஐ.நா.சபையின் பெண்களுக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

489

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா ஐ.நா.சபையின் பெண்களுக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாடகி, இசை அமைப்பாளர், சமூக சேவகர், திரைப்பட இயக்குநர் என பன்முக தன்மை கொண்ட ஐஸ்வர்யா தனுஷ், சினிமா சண்டை கலைஞர்களின் வாழ்க்கையை ஆவணப்படமாக எடுத்தவர். இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபை அவரை தென்னிந்திய பெண்களுக்கான நல்லெண்ண தூதராக நியமித்துள்ளது. தென்னிந்திய பெண்களின் நிலையை சர்வதேச சமூகத்திற்கு கொண்டு செல்வது, அவர்களின் உரிமைக்காக ஐ.நா. சபையில் குரல் கொடுப்பது போன்ற பணிகளை ஐஸ்வர்யா மேற்கொள்வார். இந்த நியமண ஆணை வழங்குவதற்கான நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகரும், ஐஸ்வாரின் கணவருமான தனுஷ், லதா ரஜினி காந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இளம் வயது இந்திய பெண் ஒருவர் இந்த பதவியை பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.