சன்னிலியோன் குறித்து சர்ச்சைக்குரிய டுவீட் செய்ததற்காக பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா மன்னிப்பு கோரினார்.

262

சன்னிலியோன் குறித்து சர்ச்சைக்குரிய டுவீட் செய்ததற்காக பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா மன்னிப்பு கோரினார்.
உலக மகளிர் தினத்தன்று, பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது டுவிட்டரில் மகளிர் தின வாழ்த்துகளை பதிவிட்டிருந்தார். அதில், உலகில் உள்ள அனைத்து பெண்களும் சன்னி லியோன் போன்று ஆண்களுக்கு மகிழ்ச்சியை தர வேண்டும் என விரும்புகிறேன் என்று பதிவு செய்திருந்தார். சன்னிலியோன் ஒரு ஆபாச பட நடிகை என்பதால் இந்த பதிவுக்கு பெரும் கண்டனம் எழுந்தது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில் ராம்கோபால் வர்மாவுக்கு கடும் எதிர்ப்புகள் வலுத்தன. இந்த நிலையில் பெண்களை கொச்சைப்படுத்தி கருத்து வெளியிட்டதாக ராம்கோபால் வர்மா மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டுவிட்டரில் தெரிவித்த கருத்துக்கு வருத்தப்படுவதாகவும், அதில் தவறான கண்ணோட்டம் இருப்பதாக தெரிந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தனது டுவிட்டரில் ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.